Sunday, March 14, 2010

Mangamah Story(real story)

மங்கம்மா ..!
(சொல்ல மறந்த கதை)
உண்மை கதை/real story

சிங்கப்பூரில் வேலை அனுமதி அட்டையை பெறுவதற்காக மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் காத்திருந்தேன், 100 பேருக்கும் அதிகமானவர்கள் உள்ள இடம் அது, எனக்கு கிடைத்த இலக்க எண் 5625 அதனை பெற்றுக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டியிருந்தேன். அலுவலகத்தின் நுழைவாயிலில் இன்னும் நிறைய பேர் வந்த வண்ணமாகவே இருந்தது. சற்று நேரம் கழித்து நுழைவாயிலை யாருமே கடக்கவில்லை மூடிய கதவு மூடியே இருக்க மறுபடியும் கதவை யாரோ திறப்பதை கவனித்தேன் ஒரு பெண் கதவை திறந்து உள்ளே நுழைந்தால் !!!.. அந்த ஒரு நொடி வெகு நாட்களாய் என் இதயத்தில் இரகசியமாய் தேக்கி வைத்திருந்த ஏக்கங்களும் பாதிப்புகளும் உயிர் பெற்றதைபோல் உணர்ந்தேன், இதய துடிப்புகள் நொடிக்கு இருமுறை துடிக்க உடல் முழுவதும் சூடு பரவியது, இப்போதும் கூட எண் கருப்பு கன்னங்கள் சிவந்ததை உணர்கிறேன். பல காலம் என்னுடன் என் கனவு உலகத்தில் வாழ்ந்தவள் இன்று என் முன் காட்சியளிக்கிறாள். ஆம் அவள்தான் என் கனவு உலகத்தின் கதாநாயகி "மங்கம்மா", பல வருடம் கழித்து இன்றுதான் அவளை காண்கிறேன் இப்போதும் கூட என் மங்கம்மா எனக்கு புதுமையாகத்தான் தென்படுகிறான், அதிகபட்சம் 10 வினாடிகள் மட்டுமே.. அதற்கு பிறகு அவளை என் கண்களை கொண்டு பார்க்க முடியவில்லை அதே மின்சார பார்வை இன்றும் என்னை தாக்குகிறது. இன்றாவது அவளிடம் ஒரு வார்த்தையாவது பேசிவிடலாமா என்று என் மனம் ஏங்கி தவித்தது சற்று சுதாரித்து கொண்டு அவள் உட்கார்ந்திருந்த எதிர் திசையில் மறைவாய் அமர என் பள்ளி பருவமும் என் முன் நிழலாடியது....எங்களின் பள்ளிபருவத்தில் நானும் மங்கமாவும் ஒரே வயது மாணவர்கள் இடைநிலை பள்ளியில் ஏற்படாத தாக்கம் உயர்நிலை பள்ளியில்தான் மங்கமாவின் மீது எனக்கு ஒரு விதமான ஈர்ப்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தோமே தவிர ஒரே வகுப்பில் படித்தில்லை, உயர்நிலை ஒன்றாம் ஆண்டில் எனக்கு ஏற்பட்ட இந்த ஈர்ப்பு உயர்நிலை இறுதி ஆண்டு வரை அதன் அர்த்தம் புரியாமலே போனது, காரணம் மங்கமாவின் மேல் எனக்கு ஏற்பட்டது காதலா? ஓர் இனக்கவர்சியா? அல்லது ஆசையா? என்னவென்று புரிந்துகொள்ள முடியாத வயது அப்போது. அவளை தினமும் ஏன் பார்க்க வேண்டும்? ஏன் ரசிக்க வேண்டும்? என எனக்குள்ளே பல விடை காணாத கேள்விகளும் எழுந்தன இருப்பினும் அவளை பார்ப்பதும், ரசிப்பதும் வாடிக்கையானது. இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் நாங்கள் படிக்கும் காலத்திலிருந்து இன்று வரை பேசிக்கொண்டதுமில்லை, பழகி கொண்டதுமில்லை. பள்ளியில் சபை கூடும்போதும், மதியம் உணவு நேரமும்தான் நன் என் மங்கமாவை காணும் நேரம் இதற்காகவே இவ்விறு நேரங்களையும் அவளுக்காக ஒதுக்கிவிடுவேன். அவளை பார்ப்பது கொஞ்ச நேரமாக இருந்தாலும் அதிலும் ஏதோ திருப்தியும் மகிழ்சியும் அடைவேன். அவளை பார்க்க பார்க்க சலிக்காத மலர்ந்த முகம் தினமும் என்னை ஆட்டிபடைத்தது, எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் என் கண்கள் அவளை ஒரு நொடியில் கண்டுவிடும் காரணம் அவளின் தோற்றம் என் மனதில் பதிந்துபோனவை. சில நேரங்களில் அவளை நான் பார்ப்பதை அவள் பார்த்துவிட்டால் என் அருகே வந்து ஒரு புன்னகை சிரிப்புடன் கண் சிமிட்டி போவாள் அப்போது ஓராயிரம் பூக்களை ஒரே நேரத்தில் என் மீது கொட்டுவதுபோல் உணர்வு ஏற்ட்படும் அப்போது என் கருப்பு கன்னங்கள் சிவப்பதையும் உணர்ந்திருக்கிறேன். மங்கமாவை பார்க்கும்போதேலாம் இன்று அவளிடம் பேசிவிடலாமா, நாளை பேசிவிடலாமா என்று தவியாய் தவித்தத காலமும் உண்டு. என் தவிப்புகளுக்கு போன ஜென்மத்து பந்தமாக இருக்குமோ என்றும் யோசித்திருக்கிறேன். மங்கம்மா சுமாரான பெண்தான் இருப்பினும் எனக்கு அவள் நாளொரு மேனி பொழுதொரு வன்னமுமாய்தான் காட்சியளிப்பாள். ஏனோ தெரியவில்லை மங்கம்மாவை பார்த்து ரசித்து மகிழ்வது, அவளின் சுட்டெரிக்கும் பார்வையில் குளிர் காய்வது, அவள் நினைவாள் வாழ்வதுமாய் சாவதுமாய் என் நிஜ வாழ்கையை அணு அணுவாய் ரசித்து ரசித்து வாழ்ந்தேன், ஆனால் என் கனவு உலகத்திலோ நாங்கள் இருவரும் பாடாத டுயட் டா.. வாழாத வாழ்க்கையா... நிஜ வாழ்கையில் முடியாததை கனவு உலகத்தில் நிறைவேற்றி மகிழ்ந்தேன். இப்படியே அவளின் மேல் எனக்கு ஏற்டப்ட்ட உணர்வுகளை பேச தெரியாமலே என் இறுதி ஆண்டு தேர்வும் முடிந்தது. இறுதி ஆண்டு தேர்வில் நன்மதிப்பு பெற்று சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்தேன், குடும்ப பொறுப்புகளை தொழில் சுமந்து என் குடும்பமே என் உலகம் அவர்களின் மகிழ்சியில்தான் என் வாழ்க்கை என மங்கம்மாவை நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பொறுப்புக்கள் கூடின, கால போக்கில் மங்கம்மாவின் நினைப்பும் அவளுக்காக ஏங்கிய ஏக்கங்களும் என்னைவிட்டு கொஞ்ச கொஞ்சமாக அகன்றது. இப்படியே பல வருடங்கள் கழிந்தன.. வேலை அனுமதி சீட்டினை புதுபிக்க மனிதவள அமைசின் அலுவலகம் வந்த நான் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப்பார்த்தேன். இப்போதாவது என்னுள் ஏற்பட்ட உணர்வுகளையும், ஏக்க்கங்களையும் மங்கம்மவிடம் சொல்லிவிடலாமா? என்று என்னுள் ஒரு போராட்டமே ஆரம்பித்தது, ஆனாலும் என்னால் முடியவில்லை! அப்போது சொல்லாத என் உணர்வுகளை இப்போது சொன்னால் தவறாய் போய்விடுமோ என அச்சம் எனை தடுத்து நிறுத்தியது, "இப்படியொரு வாய்ப்பு மீண்டும் வருமா"? என்று மனசாட்சி கேட்க்க "மங்கம்மாவின் மேல் ஏற்பட்டது ஓர் வித ஈர்ப்பு மட்டுமே காதல் அல்ல", என்று கூறி நானே என்னை சமாதான படுத்திகொண்டேன். கடந்த காலத்தில் ஏற்பட்ட உணர்வுகளையும், பாதிப்புகளையும் தோண்டி எடுப்பதை விட நிகழ்காலத்தில் இருக்கும் பொறுப்புகளை நினைத்து செயல்படுவதே சிறப்பு என்று எண்ணி எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். காலம் கடந்த செயலுக்கு என்றுமே பயலில்லை என்பதனை கருத்தில் கொண்டு என் இலக்க எண்னை அழைத்ததும் வேலை அனுமதி அட்டையை பெற்றுக்கொண்டு வெளியேறும் முன் கடைசியாய் என் மங்கம்மாவை ஒரு கனம் திரும்பிப்பார்த்தேன்.. அதே காந்த பார்வையுடன் ஒரு புன்னகை சிந்தினால் இப்போதும் கூட ஓராயிரம் பூக்களை என் மீது கொட்டியது போலவும், என் கருப்பு கன்னமும் சிவந்ததை போலவும் என்னால் உணர முடிகிறது.
சந்துரு (முரு), கோத்தா திங்கி, ஜோகூர்.(மலேசியா)

1 comments:

Post a Comment